அணிவகுக்கும் துப்பாக்கிகள்: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ 2-வது லுக் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, அவர் நடிக்கும் 63-வது படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இரண்டாவது லுக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இரண்டாவது லுக் எப்படி? - கிட்டதட்ட அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிப்பதை முதல் தோற்றமும், படத்தின் டைட்டிலும் சூசகமாக உணர்த்தியது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரை பொறுத்தவரை அவரைச் சுற்றியிலும் துப்பாக்கிகள் அணிவகுத்து கிடக்கின்றன. பின்னணியில் ‘காட் ப்ளஸ் யு மாமே’ என எழுதப்பட்டுள்ளது.

நாக்கை துருத்திக்கொண்டு, கையில் டாட்டுவுடன் நிற்கும் அஜித்தின் கலர்ஃபுல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜாலியான படமாக இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களும் உணர்த்துகின்றன. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்