மலையாள நடிகர் சித்திக் மகன் ரஷீன் காலமானார்

By செய்திப்பிரிவு

கொச்சி: பிரபல நடிகர் சித்திக்கின் மூத்த மகன் ரஷீன் சித்திக் கொச்சியில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 37. சித்திக் மகன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1985-ம் ஆண்டில் வெளியான ‘ஆ நேரம் ஆல்ப்ப தூரம்’ (Aa Neram Alppa Dooram) என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகராக அறிமுகமானவர் சித்திக். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘டர்போ’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து மோகன்லாலின் ‘ராம்’ படத்தில் நடித்து வருகிறார்.

சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை வென்றுள்ளார். இவருக்கு ரஷீன், ஷாஹீன் ஆகிய இரண்டு மகன்கள் உண்டு. இதில் இளையமகன் ஷாஹீன் ‘பத்தேமாரி’ படம் தொடங்கி அண்மையில் வெளியான ‘சேஷம் மைக்கில் ஃபாத்திமா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மூத்த மகனான ரஷீன் சிறப்பு குழந்தை (special child) என்பதால் அவர் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிப்பு தீவிரமடைந்தது. இதனையடுத்து அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 37 வயதான அவரின் இழப்புக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்