ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ நாளை வெளியாவதை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளர்களான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகியுள்ளது.
ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள் இப்படம் நாளை (ஜூன் 27) தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் ரிலீசை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளர்களான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இது நான்கு ஆண்டு பயணம் மற்றும் நாக் அஸ்வின் குழுவினரால் கடும் உழைப்பு செலுத்தப்பட்ட ஒரு கதை.
» கவனம் பெறும் பொண்வண்ணனின் ‘உப்பு புளி காரம்’ வெப்சீரிஸ்
» சுரேஷ் கோபியின் 250-வது படம் ‘வராஹம்’ - கிளிம்ஸ் வீடியோ எப்படி?
இந்த கதையை சர்வதேச அளவில் கொண்டு வருவதற்கு எடுக்கப்படாத முயற்சிகளே இல்லை. இதன் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. இதை முன்னோக்கி கொண்டு செல்ல படக்குழு ரத்தமும் வியர்வையும் சிந்தியுள்ளது.
தயவுசெய்து சினிமாவை மதிப்போம். கலையை மதிப்போம். ஸ்பாய்லர்களை வெளியிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். நிமிடத்துக்கு நிமிட அப்டேட்களோ அல்லது பைரசியில் ஈடுபடுவதோ ஆடியன்ஸின் அனுபவத்தை கெடுத்துவிடும்.
எனவே படத்தின் உள்ளடக்கத்தை பாதுகாத்து, வெற்றியை சேர்ந்து கொண்டாட ஒன்றிணைவோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago