சென்னை: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘உப்பு புளி காரம்’ இணையத் தொடர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், 'உப்பு புளி காரம்' என்ற புதிய சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா உட்பட பலர் நடித்துள்ளனர். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸை எம். ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், உருவாகியிருக்கும் இது இளைஞர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்கிறார்கள். ஷேக் இசையமைத்துள்ளார்.
கணவன், மனைவி அவர்களின் நான்கு குழந்தைகள் என ஜாலியான குடும்ப கலாட்டாவாக அனைத்து அம்சங்களுடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீட்டைக் காக்கும் அம்மாவாக சுப்புலட்சுமி, நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஈர்க்கும் பொண்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வரவேற்பை பெறுகின்றனர். திருப்பங்களுடன் முடியும் எபிசோடுகள், சுவாரஸ்யமான காட்சிகள், சின்னத்திரை நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என ‘உப்பு புளி காரம்’ வெப்சீரிஸ் பேசுப்பொருளாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago