சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனக்கு ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும், உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் கொடுத்து அவருக்கு உதவியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ஸ்டன்ட் நடிகராக பணியாற்றி வந்தார். பிறகு நகைச்சுவை பக்கம் திரும்பினார். இவர், கடந்த 2022-ம் ஆண்டு சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தனது ஒரு கை, கால் செயலிழந்து விட்டதாகவும் உதவி செய்யுமாறும் வீடியோ ஒன்றில் உருக்கமாக திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில், “எனக்கு கை, கால்விழுந்துவிட்டது. நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லை. நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், அவரது மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். சிம்புவின் இந்த உதவிக்கு நடிகர் வெங்கல் ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago