இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில்நடித்திருந்தார். இவர் கடந்த 2018-ம் வருடம் இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது அப்போது பரபரப்பானது. ‘ஹார்ன் ஓகேப்ளீஸ்’ என்ற படத்தில் 2008ம் ஆண்டு நடித்தபோது நானா படேகர் தவறாக நடித்துகொண்டதாக போலீஸிலும் புகார் கொடுத்தார். வழக்கும் தொடுத்தார். பின்னர் பாலியல் புகாரில் இருந்து விடுவிக்கப்பட்ட நானா படேகர் தனு மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்.
இந்நிலையில், இதுகுறித்து சமீபத்தில் அளித்தபேட்டியில், நடிகர் நானா படேகர் பேசியுள்ளார். அவர் கூறும்போது, “அதுஅனைத்தும் பொய் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் எனக்கு கோபமே வரவில்லை. எல்லாமே பொய்யாக இருக்கும் போது நான்ஏன் கோபப்பட வேண்டும்? திடீரென்று, ‘நீங்கள் அதை செய்தீர்கள், இதை செய்தீர்கள்’ என்று யாரோ ஒருவர் சொன்னால், நான் என்ன சொல்லமுடியும்? நான் தவறாக எதையும் செய்யவில்லை என்று கூற வேண்டுமா? உண்மை என்ன என்று எனக்குத் தெரியும்?” என்று தெரிவித்துள்ளார்.
நானா படேகர், தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago