விஜய்யின் ‘தி கோட்’ 2-வது சிங்கிள்: பவதாரிணியின் மனதை வருடும் குரல்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 2-வது பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

2-வது சிங்கிள் எப்படி?- ‘சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ’ என்ற வரிகளில் பவதராணியின் குரலில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். மெலடியாக உருவாகியுள்ள இப்பாடலுக்கு பவதாரணியின் குரல் உயிரூட்டுகிறது.

தொடர்ந்து விஜய்யின் குரலில் வலு சேர்க்கிறது. பழைய பாடல்களின் சாயல் இருப்பதை உணர முடிகிறது. ‘பறவைக் கூட்டில் வாழும் விண்மீன்’ போன்ற வரிகள் கவனிக்க வைக்கின்றன. மெட்டுக்காக வரிகளை அடுக்கியதாக தெரிகிறது. பாடலின் தொடக்கத்தில் இருக்கும் ஒருவித ஈர்ப்பு, அடுத்தடுத்த வரிகளிலும், இசையிலும் மிஸ்ஸிங். ஏஐ மூலம் பவதாரிணியின் குரல் ரீகிரியேட் செய்யபட்டதாக கூறப்படுகிறது.

தி கோட்: விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 2வது சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்