சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அடையாளமே தெரியாத கமலின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிலீஸ் ட்ரெய்லர் எப்படி?: பிரமாண்டங்களுக்கு எந்த குறைவும் இல்லாமல், கோட்டைகள், கட்டிடங்கள், பறக்கும் வாகனங்கள், வித்தியாசமான உடைகள் என மேக்கிங் மிரட்டுகிறது. அமிதாப் பச்சன் - பிரபாஸ் இடையிலான சண்டை திரையரங்க ஆர்பரிப்புக்கு உத்தரவாதம்.
இடையில் கமல்ஹாசனின் தோற்றம் ஆச்சரியம் அளிக்கிறது. கமல்தானா என யோசிக்கும் அளவுக்கு அவரது கெட்டப் அமைந்துள்ளது. பின்னணியில் சந்தோஷ் நாராயணனின் குரலில் பாடல் ஒலிக்க காட்சிகள் நகர்கிறது. ரிலீஸ் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
கல்கி 2898 ஏடி: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது.
» விஜய், பவதாரிணி குரலில் ‘தி கோட்’ 2-வது சிங்கிள் புரொமோ வீடியோ வெளியீடு
» ரயில் Review: புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை சுமந்த பயணம் எப்படி?
அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago