சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் 2-வது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சனிக்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் நாளை (ஜூன் 22) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய், மற்றும் மறைந்த பாடகர் பவதாரிணி இணைந்து பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலின் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவில் பவதாரிணியின் குரலில் மனதை வருடும் மெலடி பாடலாக இப்பாடல் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. முன்னதாக, வெளியான முதல் சிங்கிளான ‘விசில் போடு’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
» ரயில் Review: புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை சுமந்த பயணம் எப்படி?
» கவனம் ஈர்க்கும் ஹாரர் காட்சிகள் - சோனியா அகர்வாலின் ‘7ஜி’ ட்ரெய்லர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago