பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் ‘மூன் வாக்’

By செய்திப்பிரிவு

சென்னை: புதிய படம் ஒன்றுக்காக 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு ‘மூன் வாக’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘பகீரா’ படம் வெளியானது. தற்போது அவர் விஜய்யுடன் இணைந்து ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என 90-களில் இந்தக் கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களுக்கும் ஹிட்டடித்தன. கடைசியாக 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, படத்துக்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான் இந்தியா படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்