ஆண் குழந்தைக்கு தாய் ஆனார் அமலா பால்: ‘இலை’ என பெயரிட்டுள்ளதாக அறிவிப்பு!

By செய்திப்பிரிவு

கொச்சி: நடிகை அமலா பால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு ‘இலை’ என்று பெயரிட்டுள்ளதாகவும் ஜெகத் தேசாய் தெரிவித்துள்ளார். அமலா பால், ஜெகத் தேசாய் இருவருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அமலா பால் தமிழில் ‘மைனா’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஆடை’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு அமலா பாலின் பிறந்தநாளின் போது அவர் நண்பர் ஜெகத் தேசாய், தனது காதலை வெளிப்படுத்தி அமலா பாலுக்கு மோதிரம் அணிவித்து ப்ரோபோஸ் செய்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அமலா பால் - ஜெகத் தேசாய் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்