தள்ளிப் போனது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ - டிசம்பர் 6-ல் வெளியாகும் என அறிவிப்பு!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ வரும் டிசம்பர் 6 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், வரும் ஆக.15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இறுதிகட்டப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ‘புஷ்பா 2’ வெளியாக இருந்த ஆகஸ்ட் 15 அன்று புரி ஜெகன்நாத் இயக்கியுள்ள 'டபுள் ஐஸ்மார்ட்' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல விக்ரமின் 'தங்கலான்', அக்‌ஷய் குமாரின் 'கெல் கெல் மேய்ன்' உள்ளிட்ட படங்களும் அதே தேதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்