விமலின் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்தின் ‘புல்லட் வண்டியிலே’ வீடியோ பாடல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: விமல் நடித்துள்ள ‘போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் முதல் பாடலை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

விமல் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘புல்லட்டு வண்டியிலே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதசி எழுதியுள்ள இப்பாடலை மதிச்சியம் பாலா, மகாலிங்கம், குரு அய்யாதுரை, லதா, ஷிவானி ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்.

பாடல் வீடியோ;

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE