“15 வயதான என் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல்...” - நடிகர் தர்ஷனின் மகன் வேதனை 

By செய்திப்பிரிவு

பெங்களூரு: “15 வயதான என்னுடைய உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் தந்தையைப் பற்றிய உங்களின் மோசமான வார்த்தைகளுக்கு நன்றி” என கைதான கன்னட நடிகர் தர்ஷனின் மகன் வினிஷ் தர்ஷன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டோரியில், “15 வயதான என்னுடைய உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் எனது தந்தையைப் பற்றிய உங்களின் மோசமான கருத்துக்கள் மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி. என் அம்மா அப்பா ஆதரவு தேவைப்படும் இந்த கடினமான நேரத்திலும், என்னை திட்டும் உங்கள் யாரையும் மாற்ற முடியாது” என பதிவிட்டுள்ளார். வினிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

தன்னுடைய ரசிகர் ரேணுகாசுவாமியை ஆள் வைத்து கொன்ற குற்றச்சாட்டில் கன்னட நடிகர் தர்ஷன், அவருடைய காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் ஜூன் 17-ம் தேதி வரை அவர்களுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்