சென்னை: ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘தலவன்’ (Thalavan) படத்தை பார்த்து படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
பிஜூமேனன் - ஆசிஃப் அலி காம்போவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜிஸ் ஜாய் இயக்கியுள்ளார். அனுஸ்ரீ, மியா ஜார்ஜ், திலீஷ் போத்தன், கோட்டயம் நசீர், ஷங்கர் ராமகிருஷ்ணன், ஜோஜி கே ஜான், தினேஷ், அனுரூப், நந்தன் உன்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். அருண் நாராயண் படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த மே 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் பிஜூமேனனுக்கும், சப் இன்ஸ்பெக்டரான ஆசிஃப் அலிக்கும் இடையிலான அதிகார மோதலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பால் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
» ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த நடிகர் விக்ராந்த்
» “பெண்களை மையப்படுத்திய படம் என சொல்லத் தயங்குகிறார்கள்” - பார்வதி ஆதங்கம்
இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை தன்னுடைய அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. முன்னதாக ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படக்குழுவை கமல் நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago