“பெண்களை மையப்படுத்திய படம் என சொல்லத் தயங்குகிறார்கள்” - பார்வதி ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “பெண் மைய சினிமா என்பதை சொல்லவே தயங்குகிறார்கள். இப்படியான முடிவை எடுக்க அவர்களை எது கட்டாயப்படுத்துகிறது என எனக்குத் தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள முன்வராதது காரணமாக இருக்கலாம்” என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நான் நிறைய புதுமுக இயக்குநர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லோரும், ‘நீங்கள்தான் இந்தப் படத்தின் மைய கதாபாத்திரம். ஆனால் இதை நாங்கள் இதை பெண்களை மையப்படுத்திய சினிமா என்று சொல்லப்போவதில்லை’ என்கிறார்கள்.

‘பெண் மைய’ சினிமா என்பதை சொல்லவே அவர்கள் தயங்குகிறார்கள். இப்படியான முடிவை எடுக்க அவர்களை எது கட்டாயப்படுத்துகிறது என எனக்குத் தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள முன்வராதது காரணமாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை நான் இப்படியான படங்களில் தான் நடித்து வருகிறேன்.

ஆம், அண்மையில் வந்த மலையாள சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் இல்லை. இந்தப் படங்கள் ஆண்களுக்கானது. அதில் நீங்கள் பெண் கதாபாத்திரங்களை நுழைக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இன்னொன்று, இங்கே ஆண்கள் தான் படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தான் விநியோகிக்கிறார்கள்.

கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அது தான் உண்மை. நம்மை பொறுத்தவரை நமக்கான படங்களை நாம் தான் உருவாக்க வேண்டும்” என்றார். பார்வதி - ஊர்வசி நடிப்பில் அடுத்ததாக ‘உள்ளொழுக்கு’ (ullozhukku) மலையாள படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE