சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படங்களை இயக்கிய, ஆதிராஜன், எழுதி இயக்கி தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் 'தீராப்பகை'.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இதில் நாயகனாக நடித்திருக்கிறார். ஹரிப்ரியா நாயகியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே.நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு எம்.ஜி.கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
“சென்னை, பெங்களூரு, கோவை என பல்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியான முறையில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அது கொலையா, தற்கொலையா அல்லது அமானுஷ்ய விஷயமா என்ற முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறது போலீஸ். ஒரு கட்டத்தில் மர்மம் அவிழ்கிறது. நாகரீக மோகத்தால் பெண்கள் சிக்கலில் மாட்டுவதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் யூகிக்க முடியாதபடி இருக்கும்” என்றார் ஆதிராஜன்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago