சூரியின் ‘கருடன்’ 12 நாட்களில் ரூ.40 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.40 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.35 கோடி வசூலை எட்டியுள்ளது. 12 நாட்களில் ரூ.40 கோடியை வசூலித்துள்ள இப்படம் விரைவில் ரூ.50 கோடியை நெருங்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE