ஹைதராபாத்: ரவிதேஜாவின் புதிய படத்தில் நாயகியாக இணைந்துள்ளார் நடிகை ஸ்ரீலீலா. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு ரவி தேஜா நடிப்பில் வெளியான படம் ‘தமாகா’ (Dhamaka). இப்படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘பல்சர் பைக்’ பாடலும், அதில் ஸ்ரீலீலாவின் நடனமும் வைரலாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மகேஷ்பாபு நடிப்பில் வெளியாள ‘குண்டூர் காரம்’ படத்தில் ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் மூலம் நடிகை ஸ்ரீலீலா சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தார்.
இந்நிலையில் ‘தமாகா’ படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா - ஸ்ரீலீலா இணைந்து நடிக்கின்றனர். ரவி தேஜாவின் 75ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிதாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பானு போகவரபு இப்படத்தை இயக்குகிறார். ‘தமாகா’ படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கின. படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையையொட்டி திரையரங்குளில் வெளியாக உள்ளத குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளதால் மீண்டும் ஒரு வைரல் பாடலையும், நடனத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
» கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது - காவல்துறை விசாரணை
» ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக 33,000 அடி உயரத்தில் ஆக்ஷன் காட்சி
Gear up for an ultimate mass entertainer!
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago