ஃபஹத் ஃபாசில் - குஞ்சாக்கோ போபன் காம்போவில் உருவாகும் புதிய படம்!

By செய்திப்பிரிவு

கொச்சி: ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இருவரின் காம்போவும் ரசிகர்களிடையே படம் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது.

ஃபஹத் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ‘வேட்டையன்’ படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஃபஹத் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் அமல் நீரத்.

‘வரதன்’, ‘ஐயோபின்டே புஸ்தகம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. அமல்நீரத் கடைசியாக மம்மூட்டியை வைத்து ‘பீஷ்ம பருவம்’ படத்தை இயக்கியிருந்தார். கேங்க்ஸ்டர் ட்ராமாவான இப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அமல்நீரத் இயக்கும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன், குஞ்சாக்கோ போபன் இணைந்து நடிக்கிறார். இந்த மூவர் கூட்டணியும் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தின் கதாபாத்திர அறிமுகங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஃபஹத் ஃபாசில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக நிற்கிறார். அதேபோல குஞ்சாக்கோ போபனும் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்கிறார். ஆக்‌ஷன் கதைக்களமாக இருக்கும் என்பதை போஸ்டர்கள் நிரூப்பிக்கின்றன. படம் குறித்த மற்ற அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்