சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
நடிகர் விஜய் வரும் ஜூன் 22-ம் தேதி தன்னுடைய 50ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படம் வரும் ஜூன் 21-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.
விஜய் கரியரில் ரூ.100 கோடி வசூலித்து முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வித்யூத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதேபோல விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான ‘போக்கிரி’ திரைப்படமும் 21-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
முன்னதாக, தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து படம் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago