சென்னை: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனின் என்ட்ரியும், அவரது உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கருப்பு கலர் குர்தா அணிந்துகொண்டு, ‘பாரா’ பாடல் ஒலிக்க மாஸாக என்ட்ரி கொடுத்தார்.
நிகழ்வுக்குச் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஷங்கர், “முதன்முறையாக அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் படம்” என தெரிவித்தார்.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலிருந்து படத்துக்காக காத்திருக்கிறேன். எப்போதெல்லாம் கமல், ஷங்கர், அனிருத்தை பார்க்கிறேனோ அப்போதெல்லாம் படம் குறித்து அறிவிப்பை கேட்பேன்.
‘விக்ரம்’ படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூட கமல், ‘இந்தியன்’ தாத்தா கெட்டப்பில் தான் இருந்தார். அவரின் அந்த முழு ஒப்பனைக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது” என்றார். இந்நிகழ்வில் கமல்ஹாசன், ஷங்கர், அனிருத், அதிதி ஷங்கர், வசந்த பாலன், தம்பி ராமையா, லோகேஷ்கனகராஜ், நெல்சன், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பா.விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago