“மோடி பயோபிக்கை பா.ரஞ்சித், வெற்றிமாறன் எடுத்தால் நன்றாக இருக்கும்” - சத்யராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: “பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும், வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் பிரதமர் மோடி பியோபிக்கை இயக்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜிடம், “ரஜினியுடன் நடிக்கிறீர்களா? இந்தியில் சல்மான்கானுக்கு வில்லனாக நடிக்கிறீர்களா? பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் எல்லா விஷயத்தையும் தயாரிப்பு நிறுவனமே முறையாக அறிவிக்கும். நான் அதை சொல்ல முடியாது. அது தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. மீறினால் தேவையில்லாமல் என் மேல் வழக்கு வரும். ரஜினியுடன் ‘கூலி’ படத்தில் நடிக்கிறேன். மீதிக் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பர் மணிவண்ணனன் போல ஒரு இயக்குநர் படத்தை இயக்கினால் அது அப்படியே இருக்கும். விஜய் மில்டன் எடுக்கிறேன் என்றாலும் ஓகே. தவிர்த்து வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இயக்கினால் பிரதமர் மோடி பியோபிக் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்