சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடிந்த நிலையில் காணப்படும் ஒரு இடத்தில், சலூன் நாற்காலியில் அமர்ந்தவாறு, கையில் ரத்தம் தோய்ந்த பட்டா கத்தி ஒன்றை வைத்துகொண்டு, உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் காட்சியளித்தார் விஜய் சேதுபதி.
தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அறிவிப்பு போஸ்டரிலும், கையில் சவரக்கத்தி உடன், ரத்தம் தெறிக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். காது அறுபட்டு கட்டு போடப்பட்டுள்ளது. இதனால், வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. விக்ரம் வேதாவுக்கு பின் பெரிய ஆக்சன் படங்களில் நடிக்காத விஜய் சேதுபதி ‘மகாராஜா’ படத்தில் ஆக்சன் வேடம் தரித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நாளை வெளியாகும் டிரெய்லரில் அதற்கான விடை கிடைத்துவிடும்.
» “அரசியல் கேள்வி வேண்டாம்” - இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்
» ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ படத்துக்கு சம்பளம் வாங்காத கார்த்திக் ராஜா
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago