பெங்களூரு: பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே பண்ணை வீடு ஒன்றில் கடந்த 19-ம் தேதி மதுவிருந்து நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்படி குற்றப்பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் சிக்கின. போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் வாசு உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதில் நடிகை ஹேமா உட்பட 8 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியானது. இதையடுத்து விசாரணைக்கு 27-ம் தேதி (நேற்று) ஆஜராகுமாறு ஹேமா உட்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நடிகை ஹேமா, தனது உடல்நிலையை காரணம் காட்டி, 7 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தெலுங்கில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமா தமிழில், அழகிய தமிழ் மகன், சத்யம், தேவி என சில படங்களில் நடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago