‘கேம் சேஞ்சர்’ பற்றி பேச தடை! - அஞ்சலி தகவல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகை அஞ்சலி ‘கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் கிருஷ்ண சைதன்யா, விஷ்வக் சென், நேகா ஷெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், அவர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அவர் கூறும்போது, "'கேம் சேஞ்சர்' பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், எங்களுக்கு அது பற்றி பேச இப்போது அனுமதி இல்லை. படம் பற்றி இயக்குநர் ஷங்கர் அல்லது தயாரிப்பாளர் தில் ராஜுதான் பேச வேண்டும். எந்த அப்டேட்டாக இருந்தாலும் அவர்கள் மூலம்தான் வரும். அந்தப் படத்தில் நானும் ஒரு நாயகியாக நடித்திருக்கிறேன். படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE