சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இரண்டாம் சிங்கிள் வரும் 29-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இப்படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இப்படம் பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாடல் வரும் 29-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பொறுத்தவரை சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங் இடையிலான காதல் பாடலாக உருவாகியுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
A symphony is about to bloom! The 2nd single from INDIAN-2, a Rockstar ANIRUDH musical, is dropping on May 29th. Get ready to be swept away.#Indian2
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago