எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை கதையில் நயன்தாரா?

By செய்திப்பிரிவு

சென்னை: புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படமாகி வருகின்றன. இப்போது, பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை கதை திரைப்படமாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பே, இவர் வாழ்க்கை கதை சினிமாவாக உருவாக இருக்கிறது என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக, வித்யாபாலன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு அதுபற்றிய தகவல் இல்லை.

இந்நிலையில் அவருடைய பயோபிக், இப்போது தொடங்க இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இதை தயாரிக்கிறது. படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க, நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பலவேறு மொழிகளில் பாடியுள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி, இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதை பெற்ற முதல் இசைக்கலைஞர். ஐக்கிய நாடுகள் சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. ஸேவாஸதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார், எம்.எஸ்.சுப்புலட்சுமி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE