ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தின் புஜ்ஜி அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ரிலீசாகவுள்ளது. அறிவியல் புனைவு திரைப்படமான இதன் அறிமுக வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள ‘புஜ்ஜி’ என்னும் ரோபாவுக்கான அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத அளவுக்கு கிராபிக்ஸின் தரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாயகன் பிரபாஸின் நண்பனாக வரும் அந்த புஜ்ஜி ரோபோ மார்வெல் படங்களில் அயர்ன்மேன் உடன் வரும் ஜார்விஸ் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது.
மேலும் இந்த வீடியோவில் ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ட்யூன்’ படங்களில் வரும் பாலைவனம் சூழ்ந்த நிலப்பரப்பு போன்ற ஒரு டிஸ்டோப்பியன் களம் அமைக்கப்பட்டுள்ளது. படம் வெளியானபிறகு இதன் கிராபிக்ஸ் நிச்சயம் பேசுபொருளாகும் என்று நம்பலாம். ‘புஜ்ஜி’ அறிமுக வீடியோ:
» ரூ.100 கோடி வசூலை எட்டியது சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’
» ‘அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...’ - கமலின் ‘இந்தியன் 2’ முதல் சிங்கிள் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago