‘அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...’ - கமலின் ‘இந்தியன் 2’ முதல் சிங்கிள் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘பாரா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலின் வரிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

முதல் சிங்கிள் எப்படி? - அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அனிருத்துடன் இணைந்து ஷ்ருதிகா சமுத்ராலா பாடியுள்ளார். உற்சாகத்தைக் கூட்டும் இந்தப் பாடல் வீரத்தை பறைசாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளது. “பாரா வருவது ஓராட் படையா...வீரா விழுப்புண் அலங்காரா” என தொடங்கும் பாடலின் பல்லவி கவனிக்க வைக்கிறது.

“என் தாய் மண்மேல் ஆணை, இது தமிழ் மானத்தின் சேனை, வெள்ளை ரத்தம் தொட்டு வாளில் ஏற்று சாணை”, “அடிமைகள் ரத்ததுக்கு வெப்பம் தந்த வீரத் தீயே” “அதிகார வர்த்துக்கு அறைகூவல் நீயே” போன்ற வரிகள் பா.விஜய் டச். ஹைபீச்சில் சென்றுக்கொண்டிருக்கும் பாடலின் நடுவே பெண் குரல் மெலடியாக ஒலிப்பது ‘கேஜிஎஃப்’ பட ‘தீரா தீரா’ பாடலை நினைவூட்டுகிறது. கேட்டு பழகிய பாடல்களின் சாயல்கள் இருந்தபோதிலும் ‘பாரா’ அனிருத்தின் மேஜிக்.

இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இப்படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்