ஹைதராபாத்: தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத், தமிழில் 'இருவர் உள்ளம்' படத்தில் வினய் ஜோடியாக நடித்திருந்தார். இவர்தெலுங்கில் பிரதீப் தாக்கூர் தயாரித்து இயக்கிய 'ரக்ஷனா' என்ற படத்தில் நடித்துள்ளார். 4 வருடத்துக்கு முன் தொடங்கிய இந்தப் படம் நிதி சிக்கல் காரணமாக இப்போது வெளியாக இருக்கிறது. படத்துக்கு ‘5 டபிள்யூஎஸ்' (5ws) என டைட்டிலை மாற்றியுள்ளனர். இதன் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாயல் ராஜ்புத், படத்தின் தயாரிப்பாளர் தன்னை மிரட்டுவதாகக் கூறியிருந்தார். "என் சம்பளப் பாக்கியை இன்னும் கொடுக்கவில்லை. என்னை புரமோஷனுக்கு வரவழைக்க முயற்சிக்கிறார்கள். வர இயலாது என்று சொன்ன பிறகும், தெலுங்கு சினிமாவில் தடைசெய்து விடுவதாக மிரட்டுகின்றனர்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பாயல் ராஜ்புத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் பிரதீப் தாக்கூர், ஏப்.19-ம் தேதி படத்தை வெளியிட இருந்தார். பாயலுக்கான சம்பளப் பாக்கி ரூ.6 லட்சத்தைக் கொடுக்க முன் வந்தார். ஆனால் புரமோஷனுக்கு வர மறுத்ததால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனது. செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி புரமோஷனுக்கு ஒத்துழைக்காமல், தவறான நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் இப்படி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையை பேசி தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் தயாராக இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago