“வாய்ப்புக்காக 10 வருடம் சுற்றினேன்” - விமல் பட இயக்குநர் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: விமல் நாயகனாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசியதாவது: இது எனது முதல் மேடை, இந்தக் கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கதையைக் கேட்டதும், செய்யலாம் என்றார். ஆனால் கரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. பிறகு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் எண்ணம் இல்லை, ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மூலம் கருணாஸை சந்தித்துக் கதை சொன்னேன். பண்ணலாம் என ஊக்கம் தந்தார். படப்பிடிப்புக்கு ஏழு மணிக்கே மேக்கப்போடு வந்து நிற்பார் விமல். இதில் வசனம் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும். அசத்தியிருக்கிறார். இந்தக் கதைக்களம் புதிது. ஆனால் இதை நம்பி தயாரித்தது மிகப்பெரிய விஷயம். இவ்வாறு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 secs ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்