அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ முதல் தோற்றம் வெளியீடு!

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ எனும் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அஜித்தின் 63-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இதனை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் படத்தின் முதல் தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது. இது படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த லுக் உள்ளது.

துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசை ஒன்றில் கை வைத்து நிற்கிறார் அஜித். பச்சை நிறத்திலான சட்டை அணிந்துள்ளார். கைகள் முழுவதும் டாட்டூ பதிக்கப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேமராவை சமத்தாக பார்க்கிறார். அவருக்கு இடப்பக்கம் உள்ள அஜித் கெட்டவன் போலவும், வலப்பக்கம் உள்ள அஜித் அக்லியாகவும் செய்கை செய்கின்றனர்.

“இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஃபேன் பாயாக மட்டுமல்லாமல், ஃபேன் பாய் இயக்குநராகவும் தருகிறேன். யுனிவர்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்