சத்யராஜ், வசந்த் ரவி நடித்துள்ள படம், ‘வெப்பன்’.குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள இதை எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ளார். சூப்பர் ஹூயூமன் கதையான இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில், சத்யராஜ் பேசும்போது கூறியதாவது: திரையில் காட்டுவதை விட, தரையில் வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இது வாயில் வடை சுடும் கதையல்ல, விஷூவலாக வடைசுடும் கதை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அதிகம் செலவு செய்து படத்தைஉருவாக்கி இருக்கிறார். சூப்பர் ஹியூமன் கதை என்பதால் அவ்வளவு செய்திருக்கிறார்.
சினிமா, எதிர்காலத்தை நோக்கி வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் குகன் போன்ற கற்பனை வளம் கொண்டர்கள் அதை எடுத்து செல்வதற்கு முக்கியம். சில படங்கள் நடிகர்களை வைத்து வெற்றி பெறும். சில கதை, வசனத்தை வைத்து வெற்றி பெறும். இன்று படங்களின் வெற்றிக்கு டெக்னிக்கல் விஷயங்களும் முக்கியமாக இருக்கின்றன.
இது ஆரோக்கியமான விஷயம்தான். அப்போதுதான் உலக சினிமாவோடு போட்டிப் போட முடியும். முன்பு ‘இங்கிலீஷ் படத்தைப் பாரு’ என்று சொல்லிக்கொண்டிருப்போம். இன்று ராஜமவுலி மாதிரியான இயக்குநர்கள் அதைமுறியடித்து விட்டார்கள். இவ்வாறு சத்யராஜ் பேசினார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago