‘8 தோட்டாக்கள்’ பட புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்தப் படத்துக்குப் பிறகு அவர் சித்தார்த்துடன் கைகோக்கிறார். சித்தார்த்தின் 40ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள் விவரம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய படம் குறித்து சித்தார்த் கூறுகையில், “சித்தா திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஈர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை கொடுத்தது. ‘சித்தா’ படத்துக்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். ஆனால், ஸ்ரீகணேஷ் சொன்ன கதை உடனே பிடித்து விட்டது. பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இது குறித்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறும்போது, “நான் திரைக்கதையை எழுதத் தொடங்கியபோதே, இளமையாகவும் அதேசமயம் அனைத்துப் பரிமாணங்களிலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகரை எதிர்பார்த்தேன்.

அதற்கு சித்தார்த்தான் பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. கதையை முழு ஈடுபாட்டோடு கேட்டவர், அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். படத்தில் நடிப்பதற்காக திரைத்துறையில் உள்ள மற்ற பெரிய நடிகர்களுடனும் பேசி வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்