சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில், நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜ், ‘பாகுபலி’ படத்தின் ‘கட்டப்பா’ கதாபாத்திரம் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார். அண்மையில் அவரது நடிப்பில், ‘சிங்கப்பூர் சலூன்’, ‘அன்னபூரணி’ ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்ததாக அவரது நடிப்பில் ‘வெப்பன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தில் சத்யராஜ் பிரதமர் மோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு பெரியார் ஈ.வே.ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். அந்தப் படத்துக்கு ‘பெரியார்’ என தலைப்பிடப்பட்டிருந்தது. தற்போது அவர் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
» The Garfield Movie Review: பகடியும், கலகலப்பும் நிறைந்த ரீபூட் எப்படி?
» காணாமல் போன பஞ்சாபி நடிகர் வீடு திரும்பினார்: காரணம் குறித்து போலீஸில் வாக்குமூலம்
மோடியின் முதல் பயோபிக்கா?: கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடிப்பில் ‘PM Narendra Modi’ என்ற படம் வெளியானது. அதே ஆண்டு, ‘Modi: Journey of A Common Man’ என்ற வெப்சீரிஸ் ஒன்று வெளியானது. இப்படியாக ஏற்கனவே பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு படமும் வெப்சீரிஸூம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago