சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கவின். ‘மாஸ்க்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.
‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘வட சென்னை’ படங்களை தயாரித்த வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மாஸ்க்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.
கவின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.
முன்னதா, கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து அவர் இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago