கவுதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா

By செய்திப்பிரிவு

கொச்சி: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்து மம்மூட்டி நடிக்கும் படத்தை மலையாளத்தில் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது அவர் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகும் படம். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதில் மம்மூட்டி ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஏற்கெனவே மலையாளத்தில் ‘ராப்பக்கல்’,‘புதிய நிர்ணயம்’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படங்களில் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE