சென்னை: பப்புவா நியூ கினி நாட்டுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா - பப்புவா நியூ கினி இணைந்து தயாரிக்கும் முதல் படம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை மலையாள இயக்குநர் டாக்டர் பிஜூ இயக்குகிறார். ரிதாபரி சக்ரவர்த்தி மற்றும் பிரகாஷ் பாரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ‘Papa Buka’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்கிறார். அவருடன் சிலிக்கான் மீடியா நிறுவனமும் இணைகிறது. இந்த இந்திய நிறுவனங்களுடன் பப்புவா நியூ கினி நாட்டின் நேட்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் ஃபேஷன் அகாடமி (NAFA) இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படம் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியப் படைகளுடன் போரிட்ட இந்திய வீரர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத, பப்புவா நியூ கினியின் போர்ட் மோர்ஸ்பிக்கு செல்லும் இந்திய வரலாற்றாசிரியர்களான ரொமிலா மற்றும் ஆனந்த் ஆகியோரைப் பற்றிய கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது.
» “இது கேரளா!” - மம்மூட்டிக்கு எதிரான பிரச்சாரமும், ஆதரவாக களமிறங்கிய அரசியல் கட்சியினரும்!
» சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை!
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago