“இது கேரளா!” - மம்மூட்டிக்கு எதிரான பிரச்சாரமும், ஆதரவாக களமிறங்கிய அரசியல் கட்சியினரும்!

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் வலதுசாரிகளின் இணைய தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நடிகர் மம்மூட்டிக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரியினர் களமிறங்கியுள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘புழு’ (Puzhu). இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரதீனா இயக்கியிருந்தார். படத்தில் பிராமணராக மம்மூட்டி நடித்திருந்தார். அவரது தங்கையான பார்வதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள, சாதிய மனநிலை கொண்ட மம்மூட்டி அந்த இளைஞரை கொலை செய்துவிடுவார். சாதி ஆதிக்க மனநிலையைப் பற்றி இப்படம் பேசியது.

இந்தப் படத்தின் இயக்குநரான ரதீனாவின் கணவர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், இந்தப் படம் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரானது என்றும், அந்தப் படத்தில் மம்மூட்டி நடித்ததையும் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார். அவரது பேட்டியைத் தொடர்ந்து மம்மூட்டியின் அசல் பெயரான ‘முகமது குட்டி’ என்ற பெயரை குறிப்பிட்டு, ‘இஸ்லாமியரான மம்மூட்டி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்திவிட்டார்’ என சிலர் சமூக வலைதளங்களில் சர்ச்சையை எழுப்பி விமர்சித்தனர். 2 வருடத்துக்கு முன் வெளியான படத்துக்காக பேட்டி ஒன்றின் காரணமாக தற்போது இந்த பிரச்சினை வெடித்துள்ளது.

இந்நிலையில், மம்மூட்டிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேரள அமைச்சர்கள் வி.சிவன்குட்டி, கே.ராஜன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் மம்மூட்டிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

அமைச்சர் சிவன் குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மம்மூட்டியின் படத்தை பகிர்ந்து, “மம்மூட்டி மலையாளிகளின் பெருமை” என தெரிவித்துள்ளார். கேரள வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன், “மம்மூட்டி கேரளா மற்றும் மலையாளிகளின் பெருமை. மம்மூட்டியை முகமது குட்டி என்றும், கமலை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் அழைக்கும் சங்கி அரசியல் இங்கு வேலைக்கு ஆகாது. இது கேரளம்” என பதிவிட்டுள்ளார்.

“மதச்சார்பற்ற சமூகம் இதுபோன்ற பிரச்சாரத்தை ஆதரிக்காது. தெளிவான அரசியல் பார்வையும், நடிப்புத் திறமையும் கொண்ட ஒருவரை முத்திரை குத்த அவர்கள் எவ்வளவு முயன்றாலும், மாநில மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள்” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்