சீரியலில் ஹெல்மட் அணியாத நடிகைக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர், இன்னும் பிரபலமானார். இவர் இப்போது 'சீதா ராமா’ என்ற டிவி தொடரில் நடித்துவருகிறார். ஜீ கன்னடா சேனலில் இது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஒரு காட்சியில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது போல இடம்பெற்றுள்ளது. இது போக்குவரத்து விதிமீறல் என்றும் பிரபலங்கள் இப்படி ஹெல்மட் அணியாமல் நடித்திருப்பது சமூகத்துக்குத் தவறான செய்தியை பரப்புவதாக அமையும் என்றும் மங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ் எக்கூர் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இந்தக் காட்சி பெங்களூரு நந்தினி லே அவுட்டில் படமாக்கப்பட்டதால், புகார் ராஜாஜி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. அங்கு நடிகை வைஷ்ணவி கவுடா, இருசக்கர வாகன உரிமையாளர் ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்