சென்னை: இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவின் முதல் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய்யை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் மூலம் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ள படம், ‘ஹிட்லிஸ்ட்’. பிரபல இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, பாலசரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். சி.சத்யா இசை அமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் விஜய், விக்ரமன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
» மம்மூட்டியை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்?
» சனல் குமார் சசிதரன் Vs டோவினோ தாமஸ் - ‘வழக்கு’ பட ரிலீஸ் பிரச்சினையில் நடப்பது என்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago