மும்பை: தமிழில் ஜெயம்கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம் உட்பட சில படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ள இவர், பிரபல இந்தி நடிகர் ஆமிர் கானின் உறவினரும் நடிகருமான இம்ரான் கானை காதலிப்பதாகச் செய்திகள் வெளியானது. இம்ரான் கான் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். லேகா வாஷிங்டனை காதலிப்பது பற்றி இதுவரை ஏதும் சொல்லாமல் இருந்த இம்ரான் கான் இப்போது பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, “லேகா, ஒரு நபராக என் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தினார். நான் மன அழுத்தத்தில் இருந்தபோது, எனக்கு உதவியாக இருந்தவர் அவர். என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டதும் அவர்தான். அவர் இல்லாமல் இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியுமா? என்று தெரியவில்லை.
அதனால், லேகாவுடனான எனது உறவை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். என் வாழ்க்கையின் இந்தப் பகுதியையும் என் தனிப்பட்ட விஷயங்களையும் பொது வெளியில் இருந்து பாதுகாக்க முயற்சி செய்தேன். அதனால் அதைப் பற்றி யாரிடமும் பேசவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago