சென்னை: மம்மூட்டி நடித்துள்ள ‘டர்போ’ (turbo) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘புலிமுருகன்’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் நம்பிக்கை கொடுத்த இயக்குநர் வைசாக். இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘டர்போ’. இந்தப்படத்தில், மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - படம் ‘பக்கா’ மாஸ் கமர்ஷியலில் உருவாகியிருப்பதை மொத்த ட்ரெய்லரும் உணர்த்துகிறது. மம்மூட்டியின் கெட்டப்பும் ஆக்ஷனும் ஒருபுறம் என்றால், மறுபுறம் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டியின் இன்ட்ரோ அட்டகாசம். வெயிட்டான வில்லனை இறக்கியிருப்பதன் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மம்மூட்டி - ராஜ் பி ஷெட்டி காம்போ ஈர்க்கிறது. ஆக்ஷன் தெறிக்கத் தெறிக்க பரபரவென கடக்கும் ட்ரெய்லரில் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கவனம் பெறுகிறது. படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பிஷ்மபருவம்’ படத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க ஆக்ஷன் கொண்ட ஒரு வெகுஜன சினிமாவில் இறங்கியுள்ளார் மம்மூட்டி. ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago