சென்னை: கவின் நடித்துள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.15 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் மே 10-ம் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தில் கவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.15 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில், வெளியான சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ திரைப்படமும் கிட்டதட்ட ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
» ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நிறைவு
» “இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை உண்டு” - பிரவீன் காந்திக்கு வெற்றிமாறன் பதில்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் இந்த இரண்டு படங்களுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் திரையரங்குகளுக்கான பார்வையாளர்களின் வருகை கடந்த மாதத்தை விடவும் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago