கூடுதலாக 180 திரையரங்குகளில் திரையிடப்படும் கவினின் ‘ஸ்டார்’

By செய்திப்பிரிவு

சென்னை: கவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஸ்டார்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளில் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது.

பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், இப்படத்துக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் நல்ல ஓபனிங் இருந்தது. மேலும் முதல் நாள் முதல் காட்சி அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன. ரூ.8 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் எதிரொலியாக நேற்று (மே.11) முதல் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளில் ‘ஸ்டார்’ திரைப்படம் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் விமர்சனத்தை படிக்க > ஸ்டார் Review: கனவுகளைத் துரத்தும் போராட்டமும், சில தாக்கங்களும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE