‘தி கோட்’ படப்பிடிப்பு நிறைவு: துபாயில் விஜய்; அமெரிக்காவில் வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு தோற்றம் மிகவும் இளமையாக இருப்பது போல காட்டப்படுகிறது. இதற்கு டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக தனது உடலை ஸ்கேன் செய்ய, இந்தப் படத்தின் தொடக்கத்தில் நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருந்தனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. பேட்ச் ஒர்க் மட்டுமேபாக்கி இருக்கிறது. அதோடு நடிகர் விஜய் 50 சதவிகித டப்பிங்கையும் முடித்துவிட்டார் என்கிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடக்கும் கிராபிக்ஸ் பணிகளை பார்வையிட இயக்குநர் வெங்கட் பிரபுவும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் அங்கு சென்றுள்ளனர். நடிகர் விஜய், தனிப்பட்ட காரணங்களுக்காக துபாய் சென்றுள்ளார்.அவர் விமான நிலையத்துக்குள் செல்லும் வீடியோ வைரலாயின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்