‘ராயன்’ முதல் ‘தக் லைஃப்’ வரை: தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் படங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் சினிமா இந்த ஆண்டில் தனதுஇரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து எதிர்பார்க்கப்படும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் குறித்து பார்ப்போம்.

நடப்பாண்டில் தமிழ் சினிமாவின் படைப்புகளில் சுணக்கம் இருந்து வருகிறது. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ படங்களுக்குப் பிறகு ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்பது எந்தப் படத்துக்கும் கிட்டவில்லை. அதேபோல ஆங்காங்கே ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளன.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைக்கு வருகிறது. அந்தப் படத்துடன் பா.ரஞ்சித் - விக்ரமின் ‘தங்கலான்’ ஒரே நாளில் ரிலீஸ் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

ஜூலை மாதம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் வெளியாக உள்ளது. செப்டம்பர் மாதம் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் த.செ.ஞானவேல் இயக்க ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ திரைக்கு வருகிறது.

டிசம்பரில் மணிரத்னம் - கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெற்றிமாறனின் ‘விடுதலை’, சூர்யாவின் ‘கங்குவா’ படங்களின் வெளியீடும் உள்ளது. தெலுங்கில், ‘புஷ்பா 2’ மற்றும் ‘கல்கி2898ஏடி’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

17 mins ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்