கலகலப்பும் கொண்டாட்டமும் - பிருத்விராஜின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

கொச்சி: பிருத்விராஜ், பேசில் ஜோசப், யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையாள ரசிகர்கள் தாண்டி பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’.

இந்தப் படத்தில் பசில் ஜோசப், பிருத்விராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார் யோகிபாபு. நிகிலா விமல், அனஸ்வர ராஜன், ஜெகதீஷ், ரேகா, சிஜு சன்னி, இர்ஷாத் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். வரும் மே 16ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - படத்தின் டைட்டில் டிசைன், முதல் தோற்ற போஸ்டர் என அனைத்திலும் இது ஒரு கலகலப்பான ஃபேமிலி எண்டெர்டெய்னர் படம் என்பதை படக்குழு நிறுவிவிட்டது. தற்போது இந்த ட்ரெய்லரை அதனை உறுதி செய்கிறது. துபாயில் பணிபுரியும் பேசில் ஜோசப் தனது திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு கேரளா வருகிறார்.

மணப்பெண்னின் அண்ணனாக வரும் பிருத்விராஜுக்கு, பேசில் ஜோசப்பை மிகவும் பிடித்துக் போய்விடுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் கலகலப்பான காமெடி கூத்துக்களே இப்படம் என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது. காமெடியான வசனங்கள், துள்ளல் இசை என ஒரு ஜாலியான படத்துக்கு உத்தரவாதம் தருகிறது. ட்ரெய்லரில் ஓரிரு காட்சிகளில் யோகிபாபு வருகிறார். அவருக்கு வசனங்கள் எதுவும் வைக்கப்படாததால் கதாபாத்திரம் எப்படியானது என்பதை யூகிக்க இயலவில்லை. ‘குருவாயூர் அம்பலநடையில்’ ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்