ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘தி பேமிலி ஸ்டார்’ படம் கடந்த மாதம் வெளியானது. இதை அடுத்து அவர் நடிக்கும் படம், வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பான் இந்தியா படைப்பாக உருவாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான அறிவிப்பு போஸ்டரில், ஒரு போர்வீரன் சிலையின் பின்னணியில் ‘சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதை ராகுல் சாங்கிருதியன் இயக்குகிறார். இவர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ படத்தை இயக்கியவர். இதில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தில் ராஜூ தயாரிக்கும் புதிய படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கிறார். அதை ரவி கிரண் கோலா இயக்குகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago